27th of January 2014
சென்னை::முதல் மரியதை படத்தில் அறிமுகமானவர் ரஞ்சனி. அதற்கு பிறகு மண்ணுக்குள் வைரம், கடலோர கவிதைகள், உள்பட 27 தமிழ் படங்களில் நடித்தார். கடைசியாக 1991ம் ஆண்டு சார் ஐ லவ் யூ என்ற படத்தில் நடித்தார். மலையாளத்திலும் 25 படங்கள் வரை நடித்திருந்தார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இப்போது கூதரா என்ற மலையாளப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இதில் மோகன்லாலின் சகோதரியாக நடிக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: மீண்டும் நடிக்கும் ஆசை எனக்கும் துளியும் இல்லை. காரணம் முன்பைவிட மூன்று மடங்கு வெயிட் போட்டிருக்கிறேன். குழந்தை, கணவரை கவனிக்க வேண்டியது இருக்கிறது. ஆனால் கூதரா கதையை அதன் இயக்குனர் கூறியபோது எனது கேரக்டரின் தன்மை நான் நடிக்க வேண்டும் என்கிற ஆசையை தூண்டியது, வீட்டிலும் ஒப்புக் கொண்டார்கள். நடிக்க வந்துவிட்டேன். இந்தப் படத்தில் என்னை எந்த அளவுக்கு ரசிகர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் தொடர்ந்து நடிப்பதா வேண்டாமா என்று முடிவு செய்வேன். என்கிறார்.

Comments
Post a Comment