விறுவிறுப்பைக் கூட்ட, ‘ஜில்லா’வில் 10 நிமிடம் குறைப்பு!

11th of January 2014
சென்னை::இளையதளபதி விஜய், மோகன்லால் நடித்துள்ள ஜில்லா படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரித்து, ஆர்.டி.நேசன் இயக்கியுள்ள இந்தப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் திருவிழா கொண்டாட்டம் தான்.
 
நேற்று படம் பார்த்த பல ரசிகர்கள் படம் நன்றாக இருப்பதாகவும் படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் எனவும் கருத்து தெரிவித்தனர்.
 
அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க படத்தின் நீளத்தை தற்போது 10 நிமிடம் குறைத்துள்ளனர். நீளம் குறைக்கப்பட்ட படம் இன்று இரவு முதல் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படும்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments