28th of December 2013
சென்னை::மான் கராத்தே படத்தில் சிவகார்த்திகேயன் பாக்ஸராக நடிக்கிறாராம்.
சென்னை::மான் கராத்தே படத்தில் சிவகார்த்திகேயன் பாக்ஸராக நடிக்கிறாராம்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘மான் கராத்தே’. இந்தப் படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் முதன் முறையாக ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். படத்தின் கதை மற்றும் திரைக்கதையை ஏ.ஆர்.முருகதாஸ் எழுத, இயக்கி வருகிறார் திருக்குமரன்.
இந்தப் படத்துல சிவகார்த்திகேயன் பீட்டர் என்ற கதாபாத்திரத்தில் பாக்ஸராக நடிக்கிறார். ஒரு சாராரண மனிதன் எப்படி பாக்ஸர் ஆகுறான்… இதுதான் படத்தின் கதை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றிருப்பதால், ‘மான் கராத்தே’ படத்தின் எல்லா ஏரியாக்களும் இப்போதே விலை பேசப்பட்டு நல்ல விலைக்கு விற்பனை ஆகியிருப்பதாக கூறப்படுகிறது! அதாவது ரூ.20 கோடிக்கு மேல் விலை போய்யுள்ளதாம்.
மேலும படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜனவரி 1-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஆடியோவை ஃபிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
Comments
Post a Comment