2nd of December 2013
சென்னை::சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன்ஷங்கர்ராஜா. இளையராஜாவின் இளைய மகனான யுவனை, அப்படத்தை தயாரித்த அம்மா கிரியேசன்ஸ் சிவா இசையமைப்பாளராக்கினார். அவரது நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக முதல் படத்திலேயே ஹிட் பாடல்களை கொடுத்ததால் சினிமாவில் முத்திரை பதித்தார் யுவன்.
அதையடுத்து பிசியான அவர், பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து இப்போது கார்த்தி நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கியுள்ள பிரியாணி படத்தோடு 100 படங்களுக்கு இசையமைத்து விட்ட பெருமையை பெறுகிறார். அதோடு, தனது நூறாவது படத்தின் இசை பேசும்படியாக இருக்க வேண்டும் என்பதற்காக, பாடல் மற்றும் பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறாராம் யுவன்.
அதனால், தனது முதல் படத்தின் ரிலீசுக்கு எத்தனை எதிர்பார்ப்போடு காத்திருந்தாரோ அதேபோல், இப்போது பிரியாணி ரிலீசையும் எதிர்நோக்கியிருக்கும் யுவன், டிசம்பர் மாதத்தில் திரைக்கு வரும் பிரியாணி படத்தின் இசையை ரசிகர்கள் எந்த அளவுக்கு ரசிக்கிறார்கள் என்பதை சென்னையிலுள்ள ஒரு பிரதான தியேட்டருக்கு சென்று படம் பார்த்து தெரிந்து கொள்ளப்போகிறாராம்.

Comments
Post a Comment