24th december 2013
இப்போது அதர்வாவுடன் நடிக்கும், ஈட்டி படத்தில் கல்லூரி மாணவி வேடம் கிடைத்துள்ளதாம். அதனால், தான் எதிர்பார்த்தது போன்றே ப்ரமோஷன் கிடைத்து விட்டது என்றுகுஷியடைந்துள்ள ஸ்ரீதிவ்யா, இந்த படத்தில், தான் வயதை மீறிய மெச்சூரிட்டியாக தெரியவேண்டும் என்பதற்காக, பல காட்சிகளில் புடவை கட்டி வந்து, தன்னை பிரமாண்டமாக வெளிப்படுத்தியுள்ளாராம். பாடல் காட்சிகளில், மாடர்ன் காஸ்டியூம்களில் ஜொலிக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.
சென்னை::வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார் ஸ்ரீதிவ்யா. அந்த படம் ஹிட்டானதால், அடுத்து உடனடியாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும், பென்சில் படத்திற்கும், பள்ளி மாணவியாக ஒப்பந்தமானார். இதைஅடுத்து, மேலும் சில டைரக்டர்களும், அதேபோன்ற பள்ளிக்கூட கதையை ஸ்ரீதிவ்யாவிடம் சொல்லிவிட்டு, அவரது பதிலுக்காக காத்திருக்கின்றனர். ஆனால் அவருக்கோ, தொடர்ந்து, பள்ளி மாணவியாக நடிப்பதில் உடன்பாடில்லையாம். இதிலிருந்து விடுபட்டு, கல்லூரி மாணவியானால் தானே, முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க முடியும் என்று, அந்த மாதிரியான கதைகளை தேடி வந்தார்.
இப்போது அதர்வாவுடன் நடிக்கும், ஈட்டி படத்தில் கல்லூரி மாணவி வேடம் கிடைத்துள்ளதாம். அதனால், தான் எதிர்பார்த்தது போன்றே ப்ரமோஷன் கிடைத்து விட்டது என்றுகுஷியடைந்துள்ள ஸ்ரீதிவ்யா, இந்த படத்தில், தான் வயதை மீறிய மெச்சூரிட்டியாக தெரியவேண்டும் என்பதற்காக, பல காட்சிகளில் புடவை கட்டி வந்து, தன்னை பிரமாண்டமாக வெளிப்படுத்தியுள்ளாராம். பாடல் காட்சிகளில், மாடர்ன் காஸ்டியூம்களில் ஜொலிக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.
Comments
Post a Comment