யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் தமிழ் படம் 'ஆஹா கல்யாணம்'!!!

20th of December 2013
சென்னை::இந்திய  திரை உலகில் தங்களுக்கென ஒரு பிரத்தியேக  இடத்தை தரமான படங்கள் மூலம் நிர்மாணித்து கொண்டவர்கள் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பு கொண்டுள்ள யாஷ் ராஜ் நிறுவனம் முதல் முறையாக தமிழில் ' ஆஹா கல்யாணம் ' மூலம் தடம் பதிக்க உள்ளனர்.

ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்ற ' பேண்ட் பஜா பராத் ' படத்தை தமிழில் தயாரித்து உள்ளனர். சடங்கு, சம்பிரதாயம் ,உள்ளிட்ட ஆடம்பர திருமணங்களை பற்றியும் , அந்த திருமணத்தை நடத்தும் நிறுவனங்கள் பற்றியும், இசை கலந்த  காதல் உணர்வோடு கலவையாக  தயாரிக்கப்படும் படம் தான் ' ஆஹா கல்யாணம்'.   நான் ஈ  படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நானி , துடிப்புள்ள  நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மும்பையிலிருந்து  வரும் மற்றொரு இளம் நாயகி வாணி குப்தா  நாயகியாக நடிக்கிறார் . அழகு புயலாக வளம்  வரும் வாணி , நானியுடன்  இனிப்பும் காரமும் கலந்த ஒரு நட்புறவை பிரதிபலிக்கிறார்.

இயக்குனர் விஷ்ணுவர்தனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய கோகுல் இயக்குகிறார்.  தமிழில் வெளியாகும் தூம் 3 திரைப்படத்துடன் ' ஆஹா கல்யாணம் ' திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்படுகிறது. ஒளிபதிவாளர் லோகநாதனின் கண்கவரும் ஒளிபதிவில் , தரனின் மெய் மறக்க செய்யும் இசையில் உருவான பாடல்கள்  செவிக்கு விருந்தாக அமையும் விதத்தில் உள்ளன.
tamil matrimony_HOME_468x60.gif

Comments