கவுதம் மேனனின் சட்டென்று மாறுது வானிலை!!!

9th of December 2013
சென்னை::வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் என்று சினிமா பாடல் வரிகளை தனது படங்களுக்கு டைட்டிலாக வைக்கும் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், அடுத்தப்படத்துக்கும் பாடல் வரியை டைட்டிலாக வைத்துள்ளார்.

அவர் இப்போது இயக்கும் படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். புதுமுகம் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்தப் படத்துக்கு சட்டென்று மாறுது வானிலை என்ற சினிமா பாடல் வரி டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது.இதுபற்றி கவுதம் வாசுதேவ் மேனனிடம் கேட்டபோது கூறியதாவது:இந்தப் படம் காதல், ஆக்ஷன் என்று செல்லும். கவித்துவமான தலைப்பு வைக்க நினைத்தேன். சட்டென்று என் மனதில் தோன்றிய வரி, சட்டென்று மாறுது வானிலை.

என் படத்தின் பாடல் வரியே டைட்டிலாக கிடைத்ததில் மகிழ்ச்சி. இந்தப் படம் விண்ணைத்தாண்டி வருவாயாவின் இரண்டாவது பாகமா என்று கேட்கிறார்கள். கண்டிப்பாக இல்லை. இது வேறொரு தளத்தில் செல்லும் கதை. முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்குகிறது. இந்தியா முழுவதும் ஷூட்டிங் நடக்க இருக்கிறது.இவ்வாறு அவர் சொன்னார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments