அஞ்சலி இடத்தில் இவங்கதான்!!!

10th of December 2013
சென்னை::அஞ்சலிக்காக காத்திருந்த பலரும் இப்போது அவருக்கு பதில்... என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். முன்பு போல சுதந்திரமாக சென்னைக்கு வந்து போக வேண்டுமே என்று நினைத்த அஞ்சலி, சிலரது உதவியுடன் முதல்வருக்கு கடிதம் அனுப்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்னும் கூட அவருக்காக காத்திருப்பதில் அர்த்தம் இல்லை என்று முடிவெடுத்த சுந்தர்சி, தனது கலகலப்பு பார்ட் 2 வுக்கு ஸ்ரீதிவ்யாவை ஹீரோயினாக்கிவிட்டார்.

சுந்தர்சி டைரக்டர் என்றதுமே யார் ஹீரோ என்று கூட கேட்கவில்லையாம்
அவர். அந்தளவுக்கு சுந்தர்சி மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் ஸ்ரீதிவ்யா. அவரது நம்பிக்கை பொய்யாகாது என்று வாழ்த்துவோமாக. இதற்கிடையில் அஞ்சலிக்காக காத்திருந்து அவர் கிடைக்காமல் வேறொரு நடிகையை நடிக்க வைத்த இயக்குனர்கள் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டுவிட்டார் ராகவா லாரன்ஸ். முனி - 3 யில் நடிக்க அஞ்சலியைதான் கேட்டிருந்தாராம். அவரும் சம்மதித்திருந்தாராம். ஆனால் பிராக்டிகலாக ஒரு ஸ்டெப் கூட எடுத்து வைக்க முடியவில்லை லாரன்ஸ்சுக்கு. வேறு வழியில்லாமல் அஞ்சலியை விட நடிப்பில் அசுர பாய்ச்சலடிக்கும் நித்யாமேனனை ஒப்பந்தம் செய்துவிட்டார். என்ன ஒன்று? அஞ்சலி என்றால் கவர்ச்சியும் இருக்கும். நித்யா என்றால் வெறும் நடிப்பு மட்டும்தான்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments