நித்யானந்தாவிடம் ஆசி பெற்று, சன்னியாசம் வாங்கினார் நடிகை ரஞ்சிதா...!!!!

28th of December 2013
சென்னை::
நித்யானந்தாவின் 37வது பிறந்தநாளில் அவரது சிஷ்யையான நடிகை ரஞ்சிதா, நித்யானந்தாவின் ஆசியோடு சன்னியாசம் வாங்கி கொண்டார். இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் நாடோடி தென்றல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரஞ்சிதா. தொடர்ந்து ஜெய்ஹிந்த், அமைதிப்படை, மக்களாட்சி, அதர்மம், கர்ணா உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ...

சினிமாவை விட்டு சிலகாலம் ஒதுங்கியிருந்த நடிகை ரஞ்சிதா, பின்னர் நித்தியானந்தாவின் சிஷ்யையாக மாறினார். ஒருகட்டத்தில் நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் டி.வி.க்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதனை இருவரும் மறுத்தனர். பின்னர் அது தொடர்பான வழக்குகள் நடந்தது, நித்யானந்தாவின் ஆசிரமங்கள் அடித்து நொறுக்கப்பட்டது உள்ளிட்ட பல பிரச்னைகள் எழுந்தன. மேலும் இது தொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

சன்னியாசம் வாங்கிய ரஞ்சிதா

இந்நிலையில் நித்யானந்தாவின் ஆசிரமத்திலேயே தொடர்ந்து பணியாற்றி வந்த நடிகை ரஞ்சிதா, இன்று சன்னியாசம் வாங்கி கொண்டார். பெங்களூரூவை அடுத்துள்ள, பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் இருக்கும் குளத்தில் குளித்து முடித்துவிட்டு, காவி உடை உடுத்தி, நித்யானந்தாவிடம் ஆசி பெற்று சன்னியாசம் பெற்றுக் கொண்டார். இன்று நித்யானந்தாவின் 37வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளிலேயே ரஞ்சிதா சன்னியாசம் பெற்றுள்ளார்.

மா ஆனந்தமாயி ஆன ரஞ்சிதா

சன்னியாசம் பெற்ற கையோடு அவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது. இதுவரை ரஞ்சிதாவாக இருந்தவர் இனி, மா ஆனந்தமாயி என அழைக்கப்படுவார்.

சன்னியாசம் பெற்ற பின்னர் ரஞ்சிதா கூறியதாவது, சத்யா, அஹிம்சா, ஆசையா, அபரிகிரஹா பிரம்மச்சர்யத்தை புரிந்து கொண்டுள்ளேன். சம்பூர்த்தி, ஸ்ரதா, உபஞானம், அபஞானம் ஆகிய தத்துவங்களுடன் வாழ்வேன். எப்போதும் நித்யானந்தா ஆசிரமத்தில் இருப்பேன் என்று கூறியுள்ளார்.

நித்யானந்தாவுக்கு பிறகு நடிகை ரஞ்சிதா தான் அவரது ஆசிரமங்களை நிர்வகிப்பார் என்றும், தற்போது வெளிநாடுகளில் உள்ள ஏதாவது ஒரு நித்யானந்தா ஆசிரமத்திற்கு தலைமை பொறுப்பு ஏற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நித்யானந்தா சீடர்கள் அடாவடி

ரஞ்சிதா சன்னியாசம் பெற்றது குறித்து தகவல் அறிந்து நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்ற பத்திரிகையாளர்களை அங்குள்ள 5 சீடர்கள் தடுத்து நிறுத்தியதோடு, புகைப்படகாரர்களின் கேமராக்களையும் பறித்து கொண்டு அடாவடி செய்தனர். பின்னர் பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப பின்னர் கேமராவை திருப்பி கொடுத்துள்ளனர்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments