சொத்து குவிப்பில் தீவிரம் காட்டும் கதாநாயகிகள்: வீடுகள், தோட்டங்களில் முதலீடு!!!

9th of December 2013
சென்னை::தற்போதைய தமிழ் திரையுலக கதாநாயகிகள் சொத்து குவிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சம்பாத்தியம் முழுவதையும் அசையா சொத்துக்களிலும் காலி மனைகளிலும் முதலீடு செய்கிறார்கள். சாவித்திரி, காஞ்சனா வாழ்க்கையில் இருந்து இவர்கள் பாடம் கற்றதாக கூறுகின்றனர்.

சாவித்திரியும், காஞ்சனாவும் 1950 மற்றும் 60-களில் நிறைய படங்களில் நடித்தனர். இருவரும் முன்னணி கதாநாயகிகளாக நிறைய சம்பாதித்தவர்கள். பெரிய ஹீரோக்கள் ஜோடியாக நடித்து லட்சம் லட்சமாய் சம்பாதித்தார்கள். ஆனால் சாவித்திரியின் கடைசி காலத்தில் சொத்தெல்லாம் கைவிட்டு போனது. எல்லாவற்றையும் இழந்து வறுமையில் வாடி இறந்தார். அதுபோல் காஞ்சனாவும் ஏமாற்றப்பட்டார். தற்போது சொத்துக்கள் அனைத்தையும் இழந்து நிற்கிறார்.

அவர்கள்போல இல்லாமல் இப்போதைய நடிகைகள் பத்திரமாக பணத்தை பாதுகாக்கின்றனர். வருமானம் வரும் தொழில்களில் அவற்றை முதலீடும் செய்கிறார்கள். நடிகைகள் ஒரு படத்தில் 3 மாதங்களில் நடித்து முடித்து விடுகிறார்கள். இதில் முன்னணி நடிகைகளுக்கு ரூ.1.5 கோடி வரை சம்பளம் கிடைக்கிறது.

நயன்தாரா தனது வருமானத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார். கேரளாவில் நிறைய விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் வாங்கி போட்டுள்ளாராம்.

அனுஷ்காவும் ஐதராபாத்தில் ரியல் எஸ்டேட்டில் பணத்தை முதலீடு செய்கிறார். சினேகா திருமண மண்டபம் கட்டினார். திரிஷா ஓட்டல் கட்டப்போவதாக கூறப்பட்டது. நிறைய வீடுகளும் வாங்கிப் போட்டுள்ளார்.

நமீதா சூரத்தில் பிரபல கட்டுமான நிறுவனத்துடன் பங்குதாரராக இணைந்து குடியிருப்புகளை கட்டி விற்கிறார். இலியானா ஐதராபாத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்சில் கடைகள் வாங்கி துணி வியாபாரம் செய்கிறார். சிம்ரன் சம்பாதித்த பணத்தில் டி.வி. தொடர்கள் எடுக்க தயாராகிறார். ஹன்சிகா, டாப்சி போன்றோரும் காலி மனைகளில் முதலீடு செய்கிறார்கள்.
tamil matrimony_HOME_468x60.gif


 
 

Comments