4th of December 2013
சென்னை::அனுஷ்காவுக்கும் நடிகர் ராணாவுக்கும் திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக தெலுங்கு படஉலகில் கிசுகிசு பரவியுள்ளது. இருவரும் உயரம் என்பதால் பொருத்தமான ஜோடியாக இருப்பார்கள் என்கின்றனர்.
அனுஷ்காவும் ராணாவும் ‘ருத்ரமாதேவி’ படத்தில் இணைந்து நடிக்கின்றனர். தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளில் இப்படம் வருகிறது. இதன் படப்பிடிப்பில்தான் இவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
படப்பிடிப்பு ஓய்வில் ஒரே அறைக்குள் முடங்கிவிடுகிறார்களாம். தனியாக உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசுகிறார்களாம். இருவரும் காதலிப்பதாக படக்குழுவினர் முணுமுணுக்கின்றனர். ராணாவுடன் ஏற்கனவே ஸ்ரேயா, திரிஷா, இலியானா, போன்றோர் இணைத்து பேசப்பட்டனர். இப்போது அந்த பட்டியலில் அனுஷ்காவும் சேர்ந்துள்ளார்.
Comments
Post a Comment