16th of December 2013
சென்னை::மெரினா படத்தில் அறிமுகமான சிவகார்த்திகேயனின் மார்க்கெட் படத்துக்குப்படம் எகிறிக்கொண்டே செல்கிறது. அதிலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பிறகு பிரபல பட நிறுவனங்களெல்லாம் அவரை கால்சீட் கேட்டு முண்டியடித்து வருகின்றனர். சின்ன பட்ஜெட்டில் படமெடுத்து பெரிய லாபம் சம்பாதிக்கலாம் என்பதால் அவர் எந்தெந்த நடிகர்-நடிகைகளை நடிக்க வைக்க சொல்கிறாரோ அவர்களையெல்லாம் புக் பண்ண தயாராக இருக்கிறார்கள். அதனால், முதல் வேளையாக, தான் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தபோது எந்தெந்த நடிகைகளையெல்லாம் கனவுகன்னியாக நினைத்தாரோ அவர்களையெல்லாம் பட்டியல் போட்டு தான் நடிக்கிற ஒவ்வொரு படங்களுக்கும் ஜோடியாக்கி வருகிறார்.
அப்படி அவரது பட்டியலில் முதல் பெயராக இடம்பெற்றிருந்த ஹன்சிகாவுடன் மான்கராத்தேயில் சேர்ந்து விட்டார். ஆக, சிவாவின் ஒரு பெருங்கனவை ஏ.ஆர்.முருகதாஸ் நனவாக்கி வைத்து விட்டார். அதையடுத்து நயன்தாராவை டிக் பண்ணி வைத்திருந்தார் சிவகார்த்திகேயன். அதுவும் எதிர்நீச்சல் படத்தில் ஒர்க்அவுட் ஆனது. ஆனால் நயன்தாராவோ, தனுசுடன் ஒரு பாடலுக்கு ஆடிவிட்டு சென்றார். அதனால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விட்டதே என்று ஏமாற்றத்துடன் விழிபிதுங்கி நின்றார் சிவகார்த்திகேயன்.
இருப்பினும இது தான் நினைப்பதெல்லாம் நடக்கிற நல்ல காலம் என்பதால், அடுத்து தான் நடிக்கயிருக்கும் ஒரு படத்துக்கு நயன்தாராவை புக் பண்ணுமாறு ஆர்டர் போட்டுள்ளாராம் சிவகார்த்திகேயன். அதனால் அவரது ஆசையை நிறைவேற்றினால் உடனே கால்சீட் தருவார் என்பதால் நயனிடம் கால்சீட் கேட்டு நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அஜீத், ஆர்யா என்று நடித்து விட்டு, தற்போது சிம்பு, ஜெயம்ரவி என நடித்து வரும் நயன்தாரா, சிவகார்த்திகேயனுக்கு இன்னமும் ஓ.கே சொல்லவில்லையாம்

Comments
Post a Comment