சிம்பு - நயன்தாரா இணைந்தது எப்படி?!!!

6th of December 2013
சென்னை::வல்லவன் படத்தில் நடித்த போது, நெருக்கமான நண்பர்களாகி, பின் காதலர்கள் ஆன, சிம்பு, நயன்தாரா இருவரும், அதன் பின், பிரிந்த கதை தெரிந்ததே.
 
தற்போது, பாண்டிராஜ் இயக்கும் ஒரு படத்தில் இவர்கள் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். இருவரும் எப்படி இதற்கு சம்மதித்தனர் என்ற புதிய தகவல், தற்போது வெளியாகியுள்ளது.
 
சிம்புவையும், நயன்தாராவையும், மீண்டும் ஜோடியாக நடிக்க கேட்டபோது, இரண்டு பேருமே தயங்கினர். அப்போது, இந்தி திரைப்பட உலகில், ரன்பீர் கபூர், தீபிகா படுகோனே இருவருமே, ஏற்கனவே காதலித்து பிரிந்தவர்கள் தான்.
 
ஆனால், இப்போது சேர்ந்து நடிக்கிறார்களே. அதே போல் உடன் நடிப்பவர் வேண்டாதவர், வேண்டப்பட்டவர் என்பதை மறந்து, நடிப்பு என்ற மனநிலையுடன் செயல்பட்டால், எந்த பிரச்னையும் இல்லை என்று கூறினாராம், இயக்குனர் பாண்டிராஜ். அதன் பின், சிம்பு - நயன்தாரா இருவரும், ஜோடி சேர சம்மதம் தெரிவித்தனராம்.
tamil matrimony_HOME_468x60.gif
 

Comments