மலையாளத்தில் ப்ரித்விராஜ்க்கு ஜோடி போடவிருக்கிறாராம் ஜனனி அய்யர்!!!

17th of December 2013
சென்னை::மலையாளத்தில் ப்ரித்விராஜ்க்கு ஜோடி போடவிருக்கிறாராம் ஜனனி அய்யர்.பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் ஜனனி அய்யர்.
 
அதன்பிறகு ஸ்ரீகாந்துடன் பாகன் என்ற படத்தில் நடித்தார். ஆனால் நடித்த இரண்டு படங்களுமே ஓடாததால் ராசியில்லாத நடிகை என்று கொலிவுட் இயக்குனர்கள் ஜனனியை ஓரங்கட்டினார்.தற்போது மலையாளத்தில் இருந்து சில வாய்ப்புகள் வந்ததால், கேரளாவில் முகாமிட்டு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்.
 
இப்படி அவர் எடுத்த அதிரடி முயற்சியின் காரணமாக இப்போது ப்ருதிவிராஜ் நடிக்கும் செவன்த் டே என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.இப்படத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவரின் கொலை கேஸை கண்டுபிடிக்கும் வேடத்தில் ப்ருதிவிராஜ் நடிப்பதால், மறைமுகமாக ப்ருதிவிராஜ்க்கு உதவி செய்யும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் ஜனனி அய்யர்.இதனால் இந்த படத்திற்கு பிறகு மலையாளத்தில் தனக்கு ஒரு நிலையான கதாநாயகி அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மேலும் அங்குள்ள முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதற்கான பட வேட்டையையும் முடுக்கி விட்டுள்ளாராம்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments