ஆஹா கல்யாணம் சிம்ரன் ரிட்டர்ன்!!!

23rd of December 2013
சென்னை::இந்திப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த சிம்ரன் ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு இந்தி பக்கமே திரும்பவில்லை. 5 ஆண்டுகள் தமிழ், தெலுங்கில் நம்பர் ஒண்ணாக வலம் வந்தார். திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலானதும் நம்பர் ஒண் இடத்தையும் இழந்தார். ஹீரோயின் அந்தஸ்தையும் இழந்தார். நடித்தால் ஹீரோயின்தான் என்று பிடிவாதமாக இருந்தார். ஒரு கட்டத்தில் அதை தளர்த்தி அக்கா அண்ணி வேஷம் போட்டார். திடீரென டி.வி.பக்கம் போய்விட்டார்.
இப்போது மீண்டும் சினிமாவுக்கு திரும்பி இருக்கிறார். இந்தியில் வெளியாகி ஹிட்டான பேண்ட் பஜா பாரத் படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தினர் தமிழில் ஆஹா கல்யாணம் என்ற பெயரில் அதனை ரீமேக் செய்கிறார்கள். இதில் நான் ஈ நானி. இந்தி நடிகை வாணிகுப்தா நடிக்கிறார்கள். கல்யாண ஏற்பாடுகளை கவனிக்கும் ஹீரோவும், ஹீரோயினும் காதலிக்கிற மாதிரியான கதை. இதில் சிம்ரன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் சிம்ரனுக்கு நன்கு அறிமுகமானது என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் மீண்டும் தனது சினிமா கணக்கை துவக்கி இருக்கிறார் சிம்ரன்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments