வந்துட்டாருய்யா…வந்துட்டாரு...டுவிட்டரில் வடிவேலு!!!

4th of December 2013
சென்னை::நகைச்சுவை நடிகர் வடிவேல் சமூக வலைத்தளமான டுவிட்டரில் இணைந்துள்ளார்.
 
இன்றைய நவீன யுகத்தில் டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற இணைய தளங்கள் மக்களது அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது! தமிழ் சினிமாவில் பெரும்பாலனோர் இதுபோன்ற இணையதளங்களை பயன்படுத்தி தங்களை பற்றிய விவரங்களை உடனுக்குடன் பறிமாறிக் கொண்டு வருகின்றனர்.
 
இப்போது அந்த வரிசையில் நகைச்சுவை நடிகர் வடிவேலும் இணைந்துவிட்டார். நேற்று முன்தினம் முதல் வடிவேலு தனது டுவிட்டர் கணக்கை ஆரம்பித்து இருக்கிறார். “வந்துட்டேன்யா வந்துட்டேன்…” என தனது முதல் பதிவாக டுவிட்டரில் ட்வீட் செய்த அவர் தொடர்ந்து “என்னய்யா இது இவ்வளவு வேகமா பரவுது” எனவும் ட்வீட் செய்திருக்கிறார்.
 
இது குறித்து வடிவேலு ஒரு சிறு வீடியோ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்…அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘‘ஹலோ டுபிட்டர் ஃபேன்ஸ், எல்லாருக்கும் வணக்கம்! என் ஃப்ரெண்டுங்க எல்லாரும் சேர்ந்து அக்கவுண்ட் ஓபன் பண்ணுங்க, அக்கவுண்ட் ஓபன் பண்ணுஙகன்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க! நான், ‘ஏற்கெனவே பாங்கல அக்கவுண்ட் ஓபன்ல தானே இருக்கு, மறுபடியும் எதற்கு?’ன்னு கேட்டேன்! இல்லைங்க, டுபிட்டர்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுங்கன்னாங்க.
 
(‘அதுதானப்பா?’ன்னு வடிவேலு கூட இருந்தவங்கக்கிட்ட கேட்க, அவங்கல்லாம் சேர்ந்து ஆமாம், ஆமாம்னு தலையாட்ட…) பாங்க் அக்கவுண்ட் பணம் பரிமாறறதுக்கு, இது ரசிகர்களுடன் அன்பை பரிமாறறதுக்கான அக்கவுண்ட்! அதனால உடனே கடையை திறங்கன்னு கடையை திறந்திட்டேன்! இனி ரெகுலரா உங்களை சந்திப்பேன். இடையில் ஒரு சின்ன கேப் வந்துருச்சு. விரைவில உங்களை எல்லாம் ‘ஜெகஜால புஜபல தெனாலி ராமன்’ மூலமா சந்திக்க வர்றேன்’’ என்றார்.
 
வடிவேலு இப்போது ‘ஜகஜால புஜபல தெனாலிராமன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க காமெடியுடன் உருவாகி வருகிறது. ஆரம்பித்த சில மணி நேரங்களுக்குள் அவருடைய ட்விட்டர் கணக்கை ஆயிரம் பேர் தொடர ஆரம்பித்து விட்டனர். வடிவேலுவின் டுவிட்டர் முகவரி - @Actor_Vadivelu
tamil matrimony_HOME_468x60.gif

Comments