28th of December 2013
சென்னை::கடந்த மூன்று ஆண்டுகளாகவே காமெடி திருவிழாவில் சந்தானமே முதல் மரியாதையை பெற்று வருகிறார். இந்த ஆண்டும் அவரே ரேஸில் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையாதான் ஆண்டின் முதல் ஹிட் மூவி. 4 கோடி பட்ஜெட்டில் அவரே சொந்தமாக தயாரித்த படம் 20 கோடி வரை வசூலை அள்ளிக் கொடுத்தது. கூடவே நடிகர், டாக்டர் சீனிவாசன் என்ற நிஜ காமெடி கேரக்டரையும் சினிமா பீல்டில் இறக்கி விட்டார்.
தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம்-2, ராஜா ராணி, அழகுராஜா, யா யா படங்களில் அவர் நடித்த காமெடி சீன்கள் வெகுவாக ரசிக்கப்பட்டது. பட்டத்துயானையில் கெட்அப்பை மாற்றி வில்லன் காமெடியன் என்ற இரண்டு கேரக்டரில் அசத்தி இருந்தார். சந்தானத்திற்கு பாடிலாங்குவேஜ் காமெடி வராது என்பதை என்றென்றும் புன்னகை படத்தில் வந்த அந்த குடிகார நான் ஸ்டாப் காமெடி மாற்றி விட்டது.
இதே படத்தில் சந்தானம் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெண் "நான் அஞ்சு பத்துக்கு போகலாமுன்னு இருக்கேன்" என்பார். அதற்கு சந்தானம் "ஏன் நல்லாத்தானே இருக்க ஆயிரம் ஐநூருக்கு போகலாமே" என்பார். இந்த காமெடி டிரைய்லரில் வெளியானபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதை புரிந்த கொண்ட சந்தானம் படத்தில் அந்த வசனத்தை மாற்றினர். அந்த பெண் அதே வசனத்தை பேசும்போது "உன்னாதாம்மா எல்லா பிரச்னையும் கிளம்பு கிளம்பு" என்பார். அந்த காட்சியில் தியேட்டரே அதிரும்.
சேட்டை படத்தில் அவர் நடித்திருந்த உவ்வே டைப் காமெடி மக்களால் ரசிக்கப்படவில்லை. தலைவா, வணக்கம் சென்னை, 555 படங்களின் காமெடியும் மக்களை கவர்ந்தது. இந்த ஆண்டு சந்தானம் 15 படங்களில் காமெடி செய்துள்ளார். கடும் விமர்சனங்களுக்கு பிறகு பெண்களை கேலி செய்வதையும், டபுள் மீனிங் டயலாக்குகளையும் குறைத்துள்ளார்.
சந்தானத்தின் காமெடி இன்னும் அதே வேகத்தில் போய்கொண்டிருக்கிறது. சம்பளம் அதைவிட வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் 3 கோடி மதிப்பாலான ரோல்ஸ்ராய் காரை வாங்கி மற்ற காமடியன்கள் மட்டுமல்ல ஹீரோக்கள் காதிலும் புகை வர வைத்தார். அதனால்தான் சமீபத்தில் வருமானவரித்துறை உள்ளே புகுந்து வாரிசுருட்டிக் கொண்டு போனது. மொத்தத்தில் 2013ம் ஆண்டின் காமெடி சாம்பியன் சந்தானம்தான்.

Comments
Post a Comment