5th of December 2013
சென்னை::நேசன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படம் ‘ஜில்லா’. இந்த படத்தில் விஜய்யுடன் காஜல் அகர்வால், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது பிற வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த படத்தில் நடித்தற்காக நடிகர் மோகன்லாலுக்கு சம்பளமே கொடுக்கவில்லையாம். மாறாக, இப்படத்தின் கேரளா வினியோக உரிமையை மோகன்லால் வாங்கிக் கொண்டாராம்.
இப்படத்தின் கேரளா வினியோக உரிமை ரூ.4 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் ஜில்லா படத்திற்காக மோகன்லால் வாங்குகிற சம்பளம் ரூ.4 கோடி என தெரிகிறது.
பொதுவாக விஜய்க்கு மலையாளத்தில் ரசிகர்கள் ஏராளம். அவர் நடிக்கும் படங்கள் கேரளாவில் நன்கு வசூலை ஈட்டியுள்ளது. போதாதற்கு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் இந்த படத்தில் இணைந்திருப்பதால் படத்தின் வசூல் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட அதிகமாக வசூலாகும் எனவும் கூறப்படுகிறது.
‘ஜில்லா’ படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார்.

Comments
Post a Comment