ஐதராபாத்தில் பிச்சை எடுக்கும் வித்யா பாலன்!!!

3nd of December 2013
சென்னை::'டர்ட்டி பிக்சர்' என்ற படத்தில் மறைந்த சில்க் ஸ்மிதா, வேடத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய பாலிவுட் நாயகி வித்யா பாலன், தற்போது மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்த தயாராகி வருகிறார்.

டர்ட்டி பிக்சர் படத்தில் கவர்ச்சியால் பரபரப்பு ஏற்படுத்திய வித்யா, தற்போது 'பாபி ஜஸுஸ்' என்ற இந்திப் படத்தில் ஆண் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் ஒரு பிச்சைக்காரர் வேடமாம் அது.

இதற்காக, ஒரிஜினலாக பிச்சை எடுக்கும் நபர்களை சில நாட்களாக தூர இருந்து கண்காணித்த வித்யா பாலன், திடீரென்று, ஆண் வேட மேக்கப் போட்டு, ஐதராபாத் ரயில் நிலையம் வாசலில் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்களின் வரிசையில் அமர்ந்து பிச்சை எடுக்க ஆரம்பித்துவிட்டார்.

கையில் இருந்த சில்லரையை அவர் அசைத்து, அசைத்து ஓசையெழுப்ப, அவ்வழியாக சென்ற சிலர் அவரது தட்டிலும் பிச்சை போட்டு சென்றார்களாம்.

tamil matrimony_HOME_468x60.gif

Comments