சென்னை திரைப்பட விழாவில் அனிருத்துக்கு கவுரவம்!!!

9th of December 2013
சென்னை::சென்னையில் சர்வதேச திரைப்பட விழா வருகிற 12ந் தேதி தொடங்குகிறது. இந்தி நடிகர் அமீர்கான் தொடங்கி வைக்கிறார். 8 நாட்கள் நடக்கும் விழாவை 12ந் தேதி மலையாள நடிகர் மோகன்லால் முடித்து வைக்கிறார். அன்று அவர் தமிழ் திரைப்பட பிரிவில் வெற்றி பெற்ற படங்களுக்கு விருது வழங்குகிறார்.

அதே விழாவில் இசை அமைப்பாளர் அனிருத்திற்கு, அமிதாப்பச்சன் இளம் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த திரைப்படவிழாவை அமிதாப்பச்சன் தொடங்கி வைத்தார். அப்போது விழா குழுவிற்கு 11 லட்சம் ரூபாய் அன்பழிப்பாக கொடுத்தார். அந்த தொகையை சினிமா பற்றிய ஆய்வுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறியிருந்தார். அந்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையை கொண்டு ஆண்டு தோறும் சினிமாவுக்கு புதிதாக வந்து சாதிக்கும் இளைஞர்களுக்கு விருது வழங்க முடிவு செய்திருக்கிறார்கள். அந்த வரிசையில் முதல் விருதை அனிருத் பெறுகிறார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments