படாதிபதிகளுக்கு பலத்த அதிர்ச்சி கொடுக்கும் பரோட்டா சூரி!!!

3nd of December 2013
சென்னை::சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அறிமுகமானவர் பரோட்டா சூரி. அப்படத்தில் ஒரே நேரத்தில் 50 பரோட்டா சாப்பிடுவது போன்று அமைந்த காமெடி அவரை பேச வைத்ததால், அடுத்தடுத்து படங்கள் கிடைக்க, இப்போது பிசியான காமெடியனாகி விட்டார். சந்தானம் கால்சீட் கிடைக்காத படாதிபதிகள் அடுத்தபடியாக சூரியைத்தான் புக் பண்ணுகிறார்கள்.

அதிலும் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றிக்குப்பிறகு இதுவரை சூரியை கண்டுகொள்ளாமல் இருந்த படாதிபதிகள்கூட அவர் பக்கம் திரும்பி நிற்கின்றனர். அதனால் இதற்கு முன்பு வடிவேலு, இருந்தது போன்று இப்போது சந்தானம்- சூரி என்கிற நிலை உருவாகியிருக்கிறது.

அதனால் சந்தானம் படத்துக்குப்படம் படக்கூலியை சொல்லியடித்துக்கொண்டே செல்வது போல், இப்போது சூரியும் லட்சங்களை சொல்லியடிக்கத் தொடங்கியிருக்கிறார். ஒரு நாளைக்கு ஒரு லட்சம் என்று இதுவரை கேட்டு வந்தவர், இப்போது 3 லட்சம் கேட்கிறாராம். இதனால் பழைய கணக்கில் ஒரு லட்சம் என்று சூரியை தேடிச்செல்பவர்கள், அவர் மூன்று விரல்களை காட்டுவதைப்பார்த்து அதிர்ச்சியில் பின்வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments