எந்த படத்துக்கும் முழு சம்பளம் வாங்கியதில்லை ஹன்சிகா புகார்!!!

11th of December 2013
சென்னை::இதுவரை எந்த படத்துக்கும் ரிலீசுக்கு முன் முழு சம்பளம் வாங்கியதில்லை என்றார் ஹன்சிகா. பட புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வராவிட்டால் ஹீரோயின்கள் சம்
 பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. இதையடுத்து நடிகைகள் அதுபோன்ற நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்கின்றனர். ஹன்சிகாவை பொறுத்தவரை தான் நடிக்கும் படங்களில் தொடர்ச்சியாக நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

இந்நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில்,நான் நடிக்க வந்து இத்தனை வருடம் ஆகிவிட்டது. முதன்முறையாக ணுபிரியாணி படத்தில் நடித்ததற்குத்தான் பட ரிலீசுக்கு முன்பே எனக்கு முழுசம்பளமும் கைக்கு வந்து சேர்ந்தது என்று குறிப்பிட்டார். மறைமுகமாக மற்ற தயாரிப்பாளர்கள் தனக்கு ரிலீசுக்கு முன்பே சம்பளத்தை முழுமையாக தந்ததில்லை என்று ஹன்சிகா புகார் கூறியதாகவே திரையுலகினர் கருதுகின்றனர்.
 
மேலும் ஹீரோக்களை பொறுத்தவரை அவர்களுக்கு ரிலீசுக்கு முன்பே முழுமையாக சம்பளம் செட்டில் செய்யப்படுகிறது என்பதும் நிஜம் என திரையுலகினர் தெரிவிக்கின்றனர்.

tamil matrimony_HOME_468x60.gif

Comments