2nd of December 2013
சென்னை::எல்லோரும் தமிழர்களைப் போல இளிச்சவாயர்களாக இருக்க மாட்டார்களே. இதோ ஒரு சின்ன உதாரணம்.
இயக்குனருடன் ஏற்பட்ட ஈகோ மோதல் காரணமாக தான் நடித்தப் படத்துக்கே ஆபாசப்பட இமேஜை ஏற்படுத்தியவர்
நஸ்ரியா. அவரின் அல்ட்ரா மாடர்ன் ஈகோ தெரிந்தும் அவரில்லையேல் என் படம் இல்லை என்று பாலாஜி மோகன் தனது படத்தில் நடிக்க வைக்கிறார். எது மாறினாலும் நஸ்ரியா மாற மாட்டார் என்கிறார் ஜீவா.
ஆனால் ஆந்திராவைப் பாருங்கள். ஜுனியர் என்டிஆர் ஜோடியாக ரபாஷா படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார் நஸ்ரியா. முதலிரவு காட்சியொன்றில் நடித்த பிறகு, அது என் இமேஜை பாதிக்கும் டெலிட் பண்ணுங்க என்று உத்தரவிட்டிருக்கிறார். அதெல்லாம் மாத்த முடியாது என்று கறாராகச் சொன்ன இயக்குனர், நஸ்ரியா தொடர்ந்து அடம்பிடிக்கவே, முதலிரவு காட்சிக்குப் பதில் நஸ்ரியாவையே படத்திலிருந்து தூக்கிவிட்டார்.
அதனால் நஸ்ரியாவின் ஆந்திரா எண்ட்ரி முதல் ரவுண்டிலேயே அவரை நாக் அவுட் ஆக்கியிருக்கிறது.
Comments
Post a Comment