25th of December 2013
சென்னை::என்றென்றும் புன்னகை ஹிட்டானதில் சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் ஜீவா. முகமூடி, நீதானே என் பொன்வசந்தம், டேவிட் என ஹாட்ரிக் பிளாப் கொடுத்த பிறகு கிடைத்த வெற்றி என்பதால் ஸ்விஸ் பனிமலையில் நனைவதுபோல மகிழ்ச்சி மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். தினமலர் இணைய தளத்திற்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:
* என்றென்றும் புன்னகை வெற்றி பற்றி...?
இந்தப்ப படம் ஜெயிக்கும்ங்ற நம்பிக்கை ஏற்கெனவே இருந்திச்சு. ஆனா இவ்வளவு பெருசா ஜெயிக்கும்னு நிச்சயமா நினைச்சு பார்க்கல. டைரக்டர் அஹமத் ஏற்கெனவே வாமணன்ங்ற படத்தை பண்ணியவர். அதுவும் பெருசா போகல. சோ... இரண்டு பேருக்குமே ஒரு வெற்றி தேவையா இருந்திச்சு. அதுக்காக கடினமா உழைச்சோம். பலன் கிடைச்சிருக்கு.
* முதன் முதலா த்ரிஷாவுடன் நடிச்சிருக்கீங்க. இத்தனை வருடம் எப்படி அவுங்கள மிஸ் பண்ணினீங்க?
அதாங்க எனக்கும் ஆச்சர்யமா இருக்கு. அவுங்க என்னோட திக் பிரண்ட். தித்திக்குதே படத்துலயே அவுங்க என்னோட நடிக்க வேண்டியது அது மிஸ்சாகிப் போச்சு. அதன் பிறகு அவுங்க கமர்ஷியல் படம்ங்ற தனி டிராக்குல போயிட்டாங்க. நான் கமர்ஷியல் அல்லாத படங்கள் டிராக்குல போயிட்டேன். அதான் சேர்ந்து நடிக்க முடியல. இப்போதான் அந்த சான்ஸ் கிடைச்சிருக்கு. த்ரிஷா ரொம்பவே நைஸ், கியூட். எப்படி பத்து வருஷமா அழகை மெயிண்டெய்ன் பண்றாங்கன்னு ஆச்சர்யமா இருக்கு.
* ஆண்ட்ரியாவுடன் ரொம்பவே நெருக்கமா நடிச்சிருக்கீங்களே?
நடிக்க வச்சிருக்கீங்களேன்னு டைரக்டரத்தான் கேக்கணும். கதைக்கு தேவைன்னு அவர் நடிக்க சொன்னார் நடிச்சேன். அவ்ளோதான். கதையில் அவர் சூப்பர் மாடல். பெண் வாசனையே பிடிக்காத என்னை தன் வலையில் விழ வைக்க முயற்சிக்கிறார். இந்த சிக்சுவேசனில் அப்படித்தானே சீன் இருக்கும்.
* ஆண்ட்ரியா மாதிரி எந்த நடிகையாவது உங்க காதை கடிச்சிருக்காங்களா?
கல்யாணமாகி மனைவி இருக்காங்க கேள்வி கேக்குற வயசுல பையன் இருக்கான். இந்த கேள்விக்கு நான் ஏதாவது பதில் சொல்லிடலாம். என் மனைவி மகனுக்கு பதில் சொல்ல முடியாது.
* முகமூடி, டேவிட், நீ தானே என் பொன்வசந்தம்னு தொடர் தோல்விகளை கொடுத்திட்டீங்களே?
இதற்காக நான் யாரையும் குறைசொல்ல மாட்டேன். எல்லோரும் அவரவர் வேலையை கரெக்டாத்தான் செய்தாங்க. சிறு 'நாட்'டை பெரிய படமா எடுத்ததால மக்களுக்கு அது பிடிக்காம போயிட்டதா நான் நினைக்கிறேன். எல்லா படமும் ஜெயிக்கும்னு நம்பித்தான் செய்றோம். சில நேரங்கள்ல அது தவறும்போது நம்மை திருத்திக் கொள்ளணும். அதைத்தான் நான் செய்திருக்கிறேன்.
* என்றென்றும் புன்னகையின் தாமதத்திற்கு என்ன காரணம்?
படத்தோட ஷூட்டிங் மொத்தமே 60 நாள்தான் நடந்துச்சு. பெரிய ஆர்ட்டிஸ்டுங்க நடிச்சாதால அவுங்கள ஒருங்ககிணைச்சு சூட் பண்றதக்கு நாளாயிடுச்சு. சுவிஸ்ல கடும் பனி. ஒரு நாளைக்கு ஒரு சில ஷாட்தான் எடுக்க முடிஞ்சுது. அதுவும் லேட்டுக்கு ஒரு காரணம். அப்புறம் ஹாரிஸ் ஜெயராஜ். அவரை குறை சொல்ல முடியாது. ஏன்னா அவர் முதல்லேயே எனக்கு ஒருவருஷம் டயம் வேணும்னு கேட்டுக்கிட்டார். அதுக்கு நாங்களும் ஒத்துக்கிட்டோம்.
* அடுத்து...-?
யான் படம் இறுதி கட்டத்துல இருக்கு. அடுத்து சமுத்திரகனி, சந்திரமோகன், புது இயக்குனர் காளீஸ்வரன், சாய்ரமணி ஆகியோருடன் அடுத்தடுத்து படம் பண்ணப்போறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Post a Comment