6th of December 2013
சென்னை::இயக்குனர் ஷங்கர் தயாரிக்கும் 'ஐ' படத்தின் படப்பிடிப்பு இன்னும் பத்து நாட்களில் முடிவடையும் நிலையில் உள்ளதால் அவர் அதன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். நடிகர் விக்ரமும், நடிகை எமி ஜாக்சனும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகர் சந்தானமும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் தோன்றுகின்றார். இப்படத்தின் ஒளிப்பதிவை பி.சி.ஸ்ரீராமும், இசை மற்றும் பின்னணி இசையமைப்பினை ஏ.ஆர்.ரகுமானும் செய்துள்ளனர்.
இந்த படத்தில் நடிகர் விக்ரமிற்கான வித்தியாசமான மேக்-அப் சீன் ஃபூட் மற்றும் டவினா லமோன்ட் ஆகிய நிபுணர்களால் செய்யப்பட்டுள்ளது என்று ஷங்கர் முன்பு தெரிவித்திருந்தார். விக்ரம் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ஐ' படத்திற்காகத் தன்னுடைய உடலமைப்பை மிகவும் மாற்றியுள்ள விக்ரம் மீண்டும் பழைய உடலமைப்பைப் பெற்ற பின்னர் இயக்குனர் தரணியின் படத்தைத் தொடங்க உள்ளார்.

Comments
Post a Comment