2nd of December 2013
சென்னை:: 01.கொஞ்ச நாளாக தமிழ் சினிமாவிலே உங்களை காணோமே?
உலகில் ஏழாவது சிறந்த பல்கலைக்கழகம் என்று கருதப்படும், நியூயார்க் பல்கலையில் பப்ளிக் அட்மினிஷ்டிரேஷன் துறையில், ஒன்றரை ஆண்டு தங்கி, முதுகலைப் படிப்பு படித்து பட்டம் பெற்றேன். இது, நல்ல பயனுள்ள அனுபவம். இந்த இடைவெளி அதனால் தான்.
02.தமிழ் திரை உலகினரோடு தொடர்பில் இருக்கிறீர்களா?
நான் நடித்த எல்லா படங்களின் இயக்குனர்களோடும், சக நடிகர்,
நடிகைகளுடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்.
03. எந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம்?
நான், இயக்குனர்களின் நடிகை. நான் பணிபுரியும் எந்த இயக்குனருக்கும், மிகுந்த மரியாதை கொடுப்பேன். மாடர்ன் பெண்ணோ, கிராமத்துப் பெண்ணோ, நகரத்துப் பெண்ணோ, இளவரசியோ, ஏழையோ, எந்த மாதிரி பாத்திரம் எனக்கு கொடுத்தாலும், அதை சிறப்பாக செய்து, இயக்குனர்களிடமும், ரசிகர்களிடமும், நல்ல பெயர் வாங்க முடியும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.
04.ஏதாவது தமிழ்ப் படங்களில் நடிக்கிறீர்களா ?
இப்போது எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை. கைவசம்
தமிழில் படம் இல்லை. இந்த ரோலை நான் செய்தால் நன்றாக இருக்கும் என்று, டைரக்டர்கள் நினைக்கும்போது, நிச்சயம் என்னைக் கூப்பிடுவர். எந்த மொழிப் படமாக இருந்தாலும், எனது கேரக்டர் எனக்கு பிடித்தால், நடிக்க ஒப்புக் கொள்கிறேன்.
05.சமீபத்தில் பார்த்து ரசித்த தமிழ் படம்?
சமீபகாலமாக, தமிழில், மாறுபட்ட கதையம்சம் உடைய படங்கள்,அதிகமாக வருகின்றன. அதற்கு, ரசிகர்களின் ஆதரவும், அமோகமாக உள்ளது. இது, வரவேற்க தகுந்த விஷயம். நீர்ப்பறவை, நடுவிலே கொஞ்சம் பக்கத்தை காணோம்என, இன்னும் பல படங்களை பார்த்து ரசித்தேன்.
Comments
Post a Comment