5th of December 2013
சென்னை::இதுவரை, கவர்ச்சி பொம்மையாகவே வலம் வந்து கொண்டிருக்கும் ஹன்சிகாவுக்கு, புதிதாக நடிக்கும் ஒரு படத்தில், காமெடியும், கலகலப்பும், நிறைந்த வித்தியாசமான வேடமாம். இதனால், இந்த படத்தில், ரொம்பவும் ஈடுபாட்டுடன் நடித்து வருவதுடன், இந்த படத்துக்கு பின், தமிழ் ரசிகர்கள் தன் மீது வைத்துள்ள கருத்தே, மாறிவிடும் என்கிறாராம் ஹன்சிகா. காமெடியில் மட்டுமல்லாமல், அதிரடியாகவும் இந்த படத்தில் நடித்துள்ளாராம், அவர். அதிலும்,
ஒரே ஒரு பாடல் காட்சியில், ஐந்து பைக்குகளை ஓட்டுவது போன்ற காட்சியில் நடித்துள்ளாராம். இதற்காக, மார்க்கெட்டில் புதிதாக அறிமுகமாகியுள்ள, அழகானதாகவும், கம்பீரமானதாகவும் தோற்றமளிக்கும் ஐந்து பைக்குகளை வாங்கி, ஹன்சிகாவை ஓட்ட வைத்து, படமாக்கியுள்ளனராம். இதுவரை, பைக் ஓட்டி அனுபவம் இல்லாத ஹன்சிகா, அரை மணி நேரத்திலேயே, பைக் ஓட்ட கற்றுக்கொண்டு, படப்பிடிப்பில் அசத்தி விட்டாராம்.
Comments
Post a Comment