16th of December 2013
சென்னை::நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி ‘49-ஓ’ என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கியது. உலநலக் குறைவு காரணமாக சில காலம் நடிக்காமல் இருந்த கவுண்டமணி ‘வாய்மை’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். சாந்தனு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் கவுண்டமணி டாக்டராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அதைத்தொடர்ந்து
கவுண்டமணி நாயகனாக நடிக்கும் படம்தான் ‘49-ஓ’. ஆரோக்கிய தாஸ் இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குனர் கௌதம் மேனனிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். ‘49-ஓ’ படத்தில் கவுண்டமணி ஒரு விவசாயியாக நடிக்கிறார். அவர்களின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லும் படமாக இப்படம் அமையும். அதே சமயம் நகைச்சுவைக்கும் முக்கியத்தும் உள்ள படமாகவும் இருக்கும்.
முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னைக்கு அருகே குன்றத்தூரில் ஆரம்பமாகி பொங்கல் வரை நடைபெற உள்ளது. ‘49-ஓ’ (49-O) என்பது தேர்தலில் வாக்களிக்க விரும்பாதவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு விதி. எந்த ஒரு விஷயத்தையும் யார் சொல்கிறார்களோ அவர்களைப் பொறுத்து அது மக்களிடம் எளிதில் சென்றடையும். நிச்சயம் இந்தப்படத்தின் மூலமாக 49-ஒ பிரபலமாகும் என்பதிலும் சந்தேகம் இல்லை.
Comments
Post a Comment