17th of December 2013
சென்னை::ஆர்யா–டாப்சி இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன.
ஆரம்பம் படத்தில் ஆர்யாவும் டாப்சியும் இணைந்து நடித்தனர். அதுமுதல் இருவரும் நெருங்கி பழகுவதாக கூறப்படுகிறது. இருவரையும் இணைத்து பலமான கிசுகிசுக்கள் கோடம்பாக்கத்தில் உலவுகின்றன.
புது படங்களுக்கு டாப்சியை ஆர்யா சிபாரிசு செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மகிழ்திருமேனி இயக்கும் படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் தனக்கு ஜோடியாக டாப்சியை தேர்வு செய்யும்படி நிர்பந்திப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே ஆர்யா பலருடன் இணைத்து பேசப்பட்டார். குறிப்பாக நயன்தாரா, அனுஷ்காவைத் தொடர்ந்து இப்போது அந்த பட்டியலில் டாப்சியும் சேர்ந்துள்ளார்.
Comments
Post a Comment