வீரம் படததின் வெற்றியைப்பொறுத்து தனது படக்கூலியை மீண்டும் உயர்த்திப்பிடிக்கும் யோசனையில் தமன்னா!!!

22nd of December 2013
சென்னை::ஒரு காலத்தில் என் வேலை படத்தில் நடித்துக் கொடுப்பதோடு முடிந்து விட்டது. அதன்பிறகு அந்த படம் வெற்றி பெற்றதா? தோல்வி அடைந்ததா? என்பதை திரும்பியே பார்க்க மாட்டேன்.காரணம், அதைப்பற்றி நான் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று எக்கச்சக்கமாக ஸ்டேட்மெண்ட் கொடுத்து வந்தவர்தான் தமன்னா.
 
ஆனால், தனது சொந்த மொழியான இந்தியில் அவர் நடித்த ஹிம்மத்வாலா படம் வெளியாகி தோற்று போன பிறகு அவரை யாருமே கண்டுகொள்ளாத போதுதான், நடித்த படங்களின் வெற்றி என்கிற வெளிச்சத்தின் மகிமையை புரிந்து கொள்ளத் தொடங்கினார் தமன்னா. அதனால், இனி தான் நடிக்கிற ஒவ்வொரு படங்களும் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கத் தொடங்கியிருக்கிறார்.
 
இந்த நிலையில், அஜீத்துடன் நடித்துள்ள வீரம் வெற்றி பெற்று தனக்கு
கோலிவுட்டில் ஒரு பெரிய இடத்தை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கும் தமன்னா, இந்த படத்தின் வெற்றிக்குப்பிறகுதான் இனி புதிய படங்களில் கமிட்டாவேன் என்கிறாராம்.
 
காரணம். மார்க்கெட் வீழ்ச்சி காரணமாக, கோடிகளை தாண்டிச்சென்று கொண்டிருந்த தமன்னாவின் படக்கூலி தற்போது கடும் வீழ்ச்சி கண்டுள்ளதாம். அதனால் வீரம் படததின் வெற்றியைப்பொறுத்து தனது படக்கூலியை மீண்டும் உயர்த்திப்பிடிக்கும் யோசனையில் காத்திருக்கிறாராம் தமன்னா.

tamil matrimony_HOME_468x60.gif

Comments