16th of December 2013
சென்னை::ஹீரோயின் ரோல் மட்டும் கிடைக்கவே மாட்டேங்குது என ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார் ப்ரியாமணி.பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, பருத்திவீரன் மூலம் தேசிய விருது பெற்ற ப்ரியாமணி தமிழில் கடைசியாக நடித்தது ராவணன் என்ற தோல்விப் படத்தில்தான்.அதிலும் அவர் ஹீரோயின் அல்ல.

சமீபத்தில் கன்னடத்தில் அவர் நடித்த சாருலதா படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டனர்.ஆனால் படம் வந்த சுவடே தெரியவில்லை. தற்போது கன்னடம், மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.தமிழ் படங்களில் நடிக்காதது ஏன் என்று ப்ரியாமணியிடம் கேட்டால், தமிழ் படங்களில் நல்ல கதாபாத்திரங்கள் வரவில்லை என்றும் திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
மேலும் சென்னை எக்ஸ்பிரஸ் இந்தி படத்தில் குத்தாட்டம் ஆடியதை தெடர்ந்து நிறைய இந்திப் படங்களில், குத்தாட்டம் போடவே கூப்பிடுகிறார்கள்.நான் ஏற்றுக் கொள்ளவில்லை, நல்ல கதையம்சம் உள்ள படமாக இருந்தால் ஆடுவேன் என்று கூறியுள்ளார்.
Comments
Post a Comment