நட்சத்திரப் பட்டாளத்துடன் ராஜமௌலியின் ’மகாபலி!!!

22nd of December 2013
சென்னை::எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் பல மொழிகளில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற ‘மகதீரா’ திரைப்படத்தை ரசிகர்கள் மறந்திருக்கமாட்டார்கள். அதேபோன்றதொரு திரைப்படத்தை தற்போது இரவு பகல் பாராமல் உருவாக்கிக்கொண்டிருக்கிறார் ராஜமௌலி.
 
பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி, தமன்னா, நாசர், சத்யராஜ் என முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இத்திரைப்படம் தமிழில் மகாபலி என்ற பெயரில் ரிலீஸாகவிருக்கிறது. மகாபலி திரைப்படத்திற்காக பிரபாஸ், அனுஷ்கா ஆகியோர் சண்டைப்பயிற்சிகளிலும், உடற்பயிற்சிகளிலும் ஈடுபடும் காட்சிகளை வீடியோவாக அவர்களது பிறந்தநாளன்று வெளியிட்டு வந்த ராஜமௌலி தமன்னாவின் பிறந்தநாளுக்கு வீடியோ வெளியிடாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துவிட்டார்கள்.
 
ஆனாலும் ரசிகர்களுக்காக தமன்னா பங்கேற்ற ஃபோட்டோஷூட்டின் ஃபோட்டோக்களை வெளியிட்டு மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் ராஜமௌலி. கிட்டத்தட்ட ஓராண்டாக நடந்துகொண்டிருக்கும் மகாபலி திரைப்படத்தின் படப்பிடிப்பு 2014 மார்ச் மாதம் முடிகிறதாம். அதன்பிறகு கிராபிக்ஸ், இசை என பல வேலைகளும் முடிந்து 2015-ல் தான் படம் ரிலீஸ் ஆகிறதாம்.  
tamil matrimony_HOME_468x60.gif

Comments