6th of December 2013
சென்னை::பெங்களூருவில் வருகிற 26 ஆம் தேதி முதல் 8 நாட்கள் ‘6-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது.
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா முன்னிலையில் இந்த விழாவை நடிகர் கமல்ஹாசன் துவக்கி வைக்க இருக்கிறார்.
இந்த விழாவுக்காக கர்நாடக அரசு சார்பில் 2 கோடி ரூபாயை முதல் அமைச்சர் சித்தராமையா வழங்க இருக்கிறார்.
பெங்களூருவில் தொடர்ந்து 8 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த விழாவில் 45 நாடுகளைச் சேர்ந்த 145 திரைப்படங்கள் வெவ்வேறு திரையரங்குகளிலாக திரையிடப்படவிருக்கிறது.
இந்த விழாவில கன்னட சினிமாவில் முடிசூடா மன்னனாக விளங்கிய டாக்டர் ராஜ்குமார் நடித்த படங்களை திரையிட்டு அவருக்கு மரியாதை செய்யவும் இருக்கிறார்கள்.
Comments
Post a Comment