நாங்கெல்லாம் ஏடாகூடம்: சினிமா டைட்டில் தான் இது!!!!

5th of December 2013
சென்னை::இப்போதெல்லாம் சினிமாவோட கதைக்கு ரூம் போட்டு யோசிக்கிறாங்களோ இல்லையோ, டைட்டிலுக்கு ரொம்பவே யோசிக்கிறாங்க. படத்துக்கு பப்ளிசிட்டி ரொம்ப முக்கியம்ங்றதால தலைப்பிலேயே எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கணும்னு முடிவு பண்ணி கன்னாபின்னாவென்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். போங்கடி நீங்களும் உங்க காதலும், செந்தட்டி காளை செவத்த காளை, கன்னியும் காளையும் செம காதல், ஒரு பொண்ணும் மூணு களவாணிகளும், இப்படி ஏகப்பட்ட ஏடாகூட தலைப்புகளில் படங்கள் ரெடியாயிக்கிட்டிருக்கு. இந்த வரிசையில அடுத்து வருகிறது நாங்கெல்லாம் ஏடாகூடம்.

படம் சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் புதுமுகங்கள். ஆர். விஜயகுமார் என்பவர் டைரக்ட் செய்கிறார். ஆர்.எஸ்.சரவணன் பிள்ளை என்பவர் கேமராவை கையாள்கிறார். சார்லஸ் மெர்வின் என்பர் மியூசிக்கை கவனிக்கிறார். மனோஜ் தேவதாஸ், பார்வதி சுரேஷ் ஆகியோர் ஹீரோ, ஹீரோயினா அறிமுகமாகுறாங்க. தம்பி மனோஜ் தேவதாசை ஹீரோவாக்க அண்ணன் நிர்மல் தேவதாஸ் தயாரிக்கிறார்.

"விளையாட்டையும், காதலையும் மையமாக கொண்ட படம். ஒரு பருவத்தில் வெட்டியா சுத்திக்கிட்டிருக்குறவங்க நேரம் வரும்போது எப்படி தங்களை புரூப் பண்றாங்க என்கிற கதை. பெரிய ஹீரோக்கள் நடிக்கிற ஆக்ஷன் படம் மாதிரி தயாரிக்கிறோம். இறுதிகட்ட ஷூட்டிங் நடந்துகிட்டிருக்கு" என்கிறார் டைரக்டர் ஆர்.விஜயகுமார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments