15th of December 2013
சென்னை::இளைஞர்களை தனது இசையால் கவர்ந்து வரும் யுவன் ஷங்கர் ராஜாவை, ஒரு படத்தின் கதை மிகவும் கவர்ந்துள்ளது.
தற்போது 100 படங்களை கடந்துவிட்ட யுவன், படு பிஸியாக இருக்கும் இந்த நேரத்தில் சில முக்கியமான படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் பேசு என்ற ஒரு படத்தின் கதையை கேட்ட அவர், அந்த கதையால் மிகவும் கவரப்பட்டு, அப்படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
எம்.ஆர்.எஸ் கிரியேசன்ஸ் சார்பில், ரோகினி செல்வி தயாரித்திருக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் சிரில் இயக்கியுள்ளார். விக்னேஷ் என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகும் இப்படத்தில் நாயகியாக விபா நடித்துள்ளார். இவர், விஜய் ஆண்டனியின் நான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், அஜய் ரத்னம், எம்.எஸ்.பாஸ்கர், சச்சு ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
முழுக்க முழுக்க காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், சினேகன் எழுதியுள்ள பாடல்கள் அனைத்தும் 2014ஆம் ஆண்டின் ஹிட் ராகங்களாக அமைந்துள்ளன.
எஸ்.ராமகிருஷ்ணன் வசனம் எழுத, ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். கல்யாண், கூல் ஜெயந்த் நடனம் அமைக்க, கில்லி சேகர் சண்டைப்பயிற்சி அமைத்துள்ளார். கலையை வனராஜ் அமைத்துள்ளார். இப்படி பெரிய தொழில்நுட்ப கலைஞர்களோடு உருவாகியுள்ள பேசு படம், கோவா, குலுமணாலி, ஊட்டி, கொடைக்கானல், எர்ணாகுளம் மற்றும் சென்னை ஆகியப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன.
தற்பொது அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் உள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Comments
Post a Comment