கஞ்ச கருப்புவை சந்தித்தது மறக்கவே முடியாது: சமுத்திரக்கனி!!!

3nd of December 2013
சென்னை::கஞ்சா கருப்பு தயாரிக்கப் போகும் அடுத்தப் படத்தில் சமுத்திரக்கனி நடிக்கப் போகிறாராம்.

தருண்காந்த் பிலிம் ஃபேக்டரி சார்பில் கஞ்சாகருப்பு முதன் முறையாக தயாரித்து நடித்திருக்கும் படம் 'வேல்முருகன் போர்வெல்ஸ்'. இப்படத்தை மலையன் படத்தை இயக்கிய எம்.பி.கோபி இயக்கியுள்ளார். படத்திற்கான இசை ஸ்ரீகாந்த்தேவா. மகேஷ், ஆருஷி நடித்திருக்கும் இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நேற்று மாலை நடை பெற்றது.

விழாவில் அமீர், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு படத்தின் இசையை வெளியிட்டனர். அமீர் பேசும்போது: கஞ்சா கருப்பு பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. முதல் நாள் என் ஆபிசில் எப்படி பார்த்தேனோ அப்படித்தான் இன்று வரை உள்ளார் என்றார்.

தொடர்ந்து பேசிய சமுத்திரக்கனி, 'முதன்முறையாக கஞ்ச கருப்புவை சந்தித்தது மறக்கவே முடியாது, அமீர் ஆபிசில் மொட்டை மாடில இருட்டுல உட்கார்ந்திருந்தார். எழுந்து ஆபிஸ் ஹால்ல வந்து உட்கார சொன்னேன். வேணாம் இதுதான் எனக்கு சரி என்றார். ஒருநாள் திடீர்னு படம் தயாரிக்கபோறதா சொன்னார், இயக்குனர் கோபி.

கோபி பழகுறதுக்கு முன்னாடியே எல்லாருக்கும் நண்பன் ஆயிடுவான். எனக்கு அன்னமிட்ட கை அது. இதே பேனர்ல கோபி இயக்கபோற அடுத்த படத்துல நான் நடிக்க போறேன்'.என்றார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments