ர‌ஜினி பிறந்தநாளை கொண்டாடும் ஆல்பர்ட் திரையரங்கு!!!

11th of December 2013
சென்னை::ர‌ஜினிக்கும் சென்னை ஆல்பர்ட் திரையரங்குக்கும் அப்படியொரு பந்தம். சில வருடங்கள் முன்புவரை ஐஸ்வர்யாவும், சௌந்தர்யாவும் தங்கள் தந்தையின் படத்தை இந்த திரையரங்கில்தான் ரசிகர்களுடன் அமர்ந்து கண்டு களிப்பார்கள். ர‌ஜினி படத்துக்கும், ர‌ஜினிக்கும் மட்டுமே முன்னு‌ரிமை தரும் திரையரங்கு இது.
 
ர‌ஜினியின் பிறந்தநாளையும் ரசிகர்களுடன் கொண்டாட தீர்மானித்திருக்கிறது ஆல்பர்ட் திரையரங்கு. இதையொட்டி ர‌ஜினி நடித்த முரட்டுகாளை, போக்கி‌ரிராஜா, பாயும்புலி, மனிதன் ஆகிய படங்களை திரையிடுகிறது. நடிகராக இருந்த ர‌ஜினியை ஹீரோவாகவும், சூப்பர்ஸ்டாராகவும் உயர்த்திய படங்கள் இவை.
 
இன்னொரு ஆச்ச‌ரியம் இந்த நான்குமே ஏவிஎம் தயா‌ரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கியவை.
tamil matrimony_HOME_468x60.gif

Comments