நயன்தாராவை புலம்பவிட்ட லட்சுமிமேனன்-ஸ்ரீதிவ்யா!!!

17th of December 2013
சென்னை::
இன்றைக்கு கோடம்பாக்கத்தில் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் இரண்டு இளவட்ட குதிரைகள் லட்சுமிமேனன்-ஸ்ரீதிவ்யா. இதில் லட்சுமிமேனன் நடித்த சில படங்கள் ஹிட் என்பதால், விஷால், சித்தார்த், விமல் போன்ற நடிகர்களின் படங்கள் மட்டுமின்றி, அடுத்து தனுஷ் நடிக்கவிருக்கும் ஒரு படத்திற்கும் அவரிடம் கால்சீட் கேட்டுள்ளார்களாம். மேலும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யாவுக்கு அந்த ஒரு படத்தின் ஹிட்டே வரிசையாக படங்கள் புக்காகி விட்டன. அதனால் அடுத்தபடியாக மேல்தட்டு ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகளுக்காக திரைக்குப்பின்னால் தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது இவ்விரு நடிகைகளுக்குமே மார்க்கெட் இருப்பதால் படாதிபதிகளும், இயக்குனர்களும் போட்டி போட்டு இவர்களை கமிட் பண்ணி வருகின்றனர். அதில் சில டைரக்டர்கள் நயன்தாராவிடம் கால்சீட் பேசி வந்தவர்களாம். நயனின் மார்க்கெட் ஒன்றும் பெரிய அளவில் இல்லாததால் 20 லட்சத்தில் நடிப்பதற்கே இந்த நடிகைகள் தயராக இருக்கிறபோது, நயன்தாராவை எதற்காக 2 கோடி கொடுத்து புக் பண்ண வேண்டும் என்று பின்வாங்கி கொண்டிருக்கிறார்களாம்.

இதனால், அரை டஜன் படங்களில் நடிக்க வேண்டிய நயன்தாரா தற்போது இரண்டு படங்களில் மட்டுமே நடித்துக்கொண்டிருக்கிறார். அதனால் தனது வளர்ச்சிக்கு இந்த புதிய வரவு நடிகைகள் பெரிய இடையூறாக இருப்பதாக தனது அபிமான ஹீரோக்களிடம் சொல்லி புலம்புகிறாராம் நயன்தாரா.
tamil matrimony_HOME_468x60.gif

Comments