காஜல் அகர்வாலின் பில்டப் தாங்க முடியவில்லை!!!

6th of December 2013
சென்னை::சமீப காலமாக நடிகர் - நடிகைகளுக்கும், ரசிகர்களுக்கும் இடையே, பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பை உருவாக்கி கொள்கின்றனர். சில நடிகைகள், தங்களைப் பற்றிய அன்றாட தகவல்களை, பேஸ்புக்கில் வெளியிட்டு, ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
 
அந்த மாதிரி நடிகைகள், தங்களது தொடர்பில் பல லட்சம் ரசிகர்கள் இருப்பதாகவும், டமாரமடித்து வருகின்றனர். இதைப் பார்த்து, தனக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு செல்வாக்கு உள்ளது என்பதை அறிய விரும்பிய காஜல் அகர்வாலும், கடந்த சில மாதங்களுக்கு முன் தன் பெயரில், பேஸ்புக் கணக்கு துவங்கினார்.
 
அதனால், இப்போது, 50 லட்சத்தையும் விட அதிகமான ரசிகர்கள் அவரது பேஸ்புக்கில் லைக் தெரிவித்து, தொடர்பில் உள்ளனராம். இதையடுத்து, 'தென்னிந்திய சினிமாவில், அதிக ரசிகர்களை கொண்டுள்ள நடிகை நான் தான் என்று பில்டப் கொடுத்து வருகிறார் காஜல் அகர்வால்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments