11th of December 2013
சென்னை::5. ஆரம்பம்
சென்னை::5. ஆரம்பம்
சென்ற வார இறுதியில் ஆரம்பம் எட்டு லட்சங்களை வசூலித்தது. வார நாள்களில் 5.4 லட்சங்கள். இதுவரை சென்னையில் இதன் வசூல் 12.2 கோடிகள். விஸ்வரூபம், எந்திரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, துப்பாக்கி படங்களைவிட இது குறைவான வசூல்.
4. ஜன்னல் ஓரம்
மலையாள ஆர்டினரியின் ரீமேக்கான இப்படம் சென்ற வார இறுதியில் 8.5 லட்சங்களும், வார நாள்களில் 26.6 லட்சங்களும் வசூலித்து நான்காவது இடத்தில் உள்ளது. முதல் பத்து தினங்களில் சென்னை வசூல் 81.8 லட்சங்கள்.
3. கல்யாண சமையல் சாதம்
சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 29.5 லட்சங்களை வசூலித்துள்ளது. இந்த வாரம் இவன் வேறமாதிரி வெளியாவதால் படத்தின் வசூல் மேலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
2. நவீன சரஸ்வதி சபதம்
ஜெய் நடித்திருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் வசூலித்தது 34.6 லட்சங்கள். வார நாள்களில் ஏறக்குறைய ஒரு கோடி. முதல் பத்து தினங்களில் 2.64 கோடியை வசூலித்து நம்பிக்கையளித்துள்ளது.
1. தகராறு
மீண்டும் ஒரு அடிதடி மதுரைப் படம். பரவாயில்லை, மோசம் என்று கலவையான விமர்சனங்கள். சென்ற வாரம் வெளியான படம் முதல் மூன்று தினங்களில் 95 லட்சங்களை வசூலித்துள்ளது.
Comments
Post a Comment