தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி நடிகர்கள் பங்கேற்கும் ‘சிசிஎல்’ நட்சத்திர கிரிக்கெட் போட்டி!!!

2nd of December 2013
சென்னை::தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி நடிகர்கள் பங்கேற்கும் ‘சிசிஎல்’ நட்சத்திர கிரிக்கெட் போட்டி அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் நடக்கிறது.
 
இதில் தமிழ் நடிகர்களின் சென்னை ரைனேஸ் அணிக்கு நடிகைகள் நயன்தாரா, திரிஷா ஆகியோர் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
 
திரிஷா ஏற்கனவே இந்த அணியில் தூதுவராக இருந்துள்ளார். நயன்தாராவை தூதுவராக நியமித்து பிறகு நீக்கி விட்டனர். மீண்டும் தூதுவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளீர்களா என்று இருவரிடமும் கேட்டபோது மறுத்தனர்.
 
நயன்தாரா கூறும்போது, சிசிஎல் கிரிக்கெட் அணிக்கு தூதுவராக இருக்கும்படி கேட்டு யாரும் என்னை அணுகவில்லை. அதற்கு என்னிடம் நேரமும் இல்லை. தற்போது எனது முழு கவனமும் நான் நடித்துக் கொண்டிருக்கும் படங்களில்தான் உள்ளது. வேறு எதுவும் இல்லை என்றார்.
 
திரிஷா கூறும்போது, கடந்த பல போட்டிகளில் தூதுவராக இருக்கும்படி என்னை அணுகினர். சில காரணங்களால் நடக்கவில்லை. இப்போது நடக்க உள்ள போட்டிக்கு யாரும் என்னை அழைக்கவில்லை என்றார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments