2nd of December 2013
சென்னை::கடந்த வாரம் வெளியான 3 படங்களுமே பாக்ஸ் ஆபீசில் ஏமாற்றம் அளித்துள்ளன.
ஜெய் நடிப்பில் 'நவீன சரஸ்வதி சபதம்' படத்தை புதியவர் சந்துரு இயக்கி இருந்தார். பார்த்திபன், விமல், மனிஷா நடித்த 'ஜன்னல் ஓரம்' படத்தை கரு.பழனியப்பன் இயக்கியுள்ளார். மற்றொரு படம், 'விடியும் வரை'. பாலாஜி குமார் இயக்கியுள்ளார்.
இந்த மூன்று படங்கள் குறித்து நல்லவிதமான விமர்சனங்களே வெளியாயின. அதிலும் குறிப்பாக 'விடியும் வரை' படத்துக்கு விமர்சகர்களால் நல்ல விமர்சனம் கிடைத்தது. இருப்பினும், மூன்று படங்களும் ரசிகர்களை தியேட்டர்கள் வரை இழுப்பதில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
காரணம், இந்த படங்களின் விளம்பர யுக்தி ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை என்று கூறப்படுகிறது. அதனாலதான் படத்துக்கு நல்ல ஓபனிங்கை கிடைக்கவில்லையாம். 'நவீன சரஸ்வதி சபதம்', 'ஜன்னல் ஓரம்', 'விடியும் வரை', மூன்றுமே சிறு பட்ஜெட் படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment