4th of December 2013
சென்னை::கார்த்தி, ஹன்சிகா மோத்வானி, பிரேம்ஜி நடித்துள்ள படம் பிரியாணி. வெங்கட் பிரபு டைரக்ட் செய்துள்ளார். இந்தப் படம் வருகிற 20ந் தேதி வெளிவருவதாக உள்ளது. இதையொட்டி நேற்று (டிசம்பர் 3) படத்தை தணிக்கை குழுவினர் பார்த்துவிட்டு படத்தில் அடல்ட் கண்டெண்ட் இருக்கிறது என்று கூறி யு/ஏ சான்றிதழ் கொடுத்தனர்.
அதாவது பெற்றவர்களின் அனுமதியுடன் குழந்தைகள் பார்க்க வேண்டும். இது பெரிய பிரச்னை அல்ல. ஆனால் யு/ஏ சான்றிதழ் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்காது. வரிவிலக்கு கிடைக்காவிட்டால் தயாரிப்பாளர் கோடி கணக்கில் அரசுக்கு வரி கட்ட வேண்டியது வரும். இதனால் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு கொண்டு செல்கிறது.
நாளை மறுநாள் (டிசம்பர் 6) ரிவைசிங் கமிட்டி பார்க்கிறது. சில சிறிய கட்டுகளுடன் யு கொடுக்கலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment