6th of December 2013
சென்னை::ஜில்லா’ படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில், தினம் தினம் படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களும் வெளிவந்து
ரசிகர்களை திக்குமுக்காட வைத்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் மோகன்லாலும், விஜய்யும் இணைந்து பாடுவது மாதிரியான ஒரு ஓப்பனிங் சாங் வருகிறது.
இந்தப் பாடலில் விஜய்க்கு சங்கர் மகாதேவனும், மோகன்லாலுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியமும் பின்னணி பாடியுள்ளார்கள். இந்தப் பாடலை யுகபாரதி எழுதியிருக்கிறார்.
இந்தப் பாடலில் விஜய்க்கு சங்கர் மகாதேவனும், மோகன்லாலுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியமும் பின்னணி பாடியுள்ளார்கள். இந்தப் பாடலை யுகபாரதி எழுதியிருக்கிறார்.
இந்தத் தகவலை ‘ஜில்லா’வுக்கு இசை அமைக்கும் டி.இமானே டுவீட் செய்திருக்கிறார். அனேகமாக எஸ்.பி.பி. - சங்கர் மகாதேவன் இணைந்து பாடும் முதல் பாடல் இதுவாகதான் இருக்கும்!
Comments
Post a Comment