ஐ படப்பிடிப்பு முடிந்ததால் பழைய நிலைக்கு உடம்பை மாற்றுகிறார் விக்ரம்!!!

9th of December 2013
சென்னை::சீயான் விக்ரமின் கேரியரில் ஷங்கரின் அந்நியன் முக்கியத்துவம் வாய்ந்த படம். ஏற்கனவே கமலை வைத்து ஷங்கர் இயக்கிய இந்தியன் படத்தைப்போன்று இதுவும் சமூக களை எடுக்கப்பட்ட படம்தான். என்றபோதும், புதிய பாணியில் அப்படம் உருவானது. அதோடு, அந்நியனுக்காக மூன்றுவிதமான கெட்டப்புகளில் நடித்திருந்தார் விக்ரம்.

ஆனபோதும், ஒன்றோடு ஒன்று ஒட்டாத வகையில் மாறுபட்ட வடிவம், நடிப்பு என கொடுத்து நடிப்பில் பல படிகள் உயர்ந்து நின்றார் விக்ரம். அதனால்தான் நண்பன் படத்தையடுத்து தான் இயக்கும் ஐ படத்துக்கும் விக்ரமை புக் பண்ணினார் ஷங்கர். இப்படத்துக்காக பல மாதங்களாக உடல்கட்டை ஸ்லிம்மாக மாற்றி ஆளே அடையாளம தெரியாத அளவுக்கு உருமாறி நடித்த விக்ரம், பின்னர் உடம்பை பயில்வான் போன்று மாற்றி நடித்தார். இப்படியே பலவிதமான கெட்டப்புகளில் இப்படத்தில் அவர் நடித்திருப்பதாக தெரிகிறது.

ஆக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐ படத்துக்காக முழுசுமாக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட விக்ரம், இன்னும சில நாட்களோடு அப்படத்திலிருந்து விடைபெறுகிறாராம். அதையடுத்து, தரணி உள்பட சிலரிடம் கதை கேட்டு வைத்திருப்பவர் அப்படங்களில் ஒவ்வொன்றாக நடிக்கப்போகிறாராம். ஆனால், ஐ படத்துக்காக உடம்பை அடையாளமே தெரியாத அளவுக்கு மாற்றியிருப்பதால், தனது பழைய உடம்பை கொண்டு வருவதற்காக சில மாதங்கள் ஓய்வெடுக்கப்போகிறாராம் விக்ரம்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments