30th of December 2013
சென்னை::இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு ஹீரோவாக சினிமாவில் என்ட்ரியாகியிருக்கும் புயல் காமெடியன், தனது படப்பிடிப்பு நடக்கும் ஸ்பாட்டுக்குள் வெளியாட்கள் யாருமே நுழையாதபடி பலத்த பந்தோபஸ்து போட்டு படப்பிடிப்பு நடத்தி வருகிறார். ஆனால் அவர்களது கட்டுக்காவலையும மீறி அப்படி என்னதான் விசேசமாக படமாக்குகிறார் என்பதை பார்ப்போமே என்று ஸ்பாட்டுக்குள் நுழைந்தபோதுதான் அவர் படமாக்கிக்கொண்டிருந்த அந்த காட்சி கண்ணில் பட்டது.

அதாவது, இளவரசி கோலத்தில் செல்லும் கதாநாயகியை புயல் காமெடியன் சீண்டுகிறார். அப்போது, இளவரசியையே சீண்டும் அளவுக்கு துணிச்சல் வந்து விட்டதா? என்று நாயகி நடிகரைப்பார்த்து கோபத்துடன் கேட்கிறார். அதற்கு நடிகரோ, அவர் இளவரசி என்று சொன்னதை... என்ன இலவச அரிசியா? என்று கிண்டலடிப்பது போல் படமாக்கப்பட்டது.
இதுபோன்று ஆளுங்கட்சியை அட்டாக் பண்ணும் நிறைய சமாச்சாரங்களை படம் முழுக்க பேசுகிறாராம் புயல். அதனால்தான், இந்த விசயம் இப்போதே லீக்அவுட்டாகி விட்டால் உஷாராகி விடுவார்கள் என்பதற்காக படப்பிடிப்பை செக்யூரிட்டி போட்டு நடத்தி வருகிறாராம். ஆனால், இதைப்பார்த்து சிலர், தளபதி நடிகருக்கு வந்த சோதனை தெரிந்தும் இந்த நடிகர் இப்படி வம்படியாக லந்து பண்ணிக்கொண்டிருக்கிறாரே என்று ஸ்பாட்டில் சிலர் கிசுகிசுப்பதும் நம் காதில் விழுந்தது.
Comments
Post a Comment