22nd of December 2013
சென்னை::படங்களில் நடிக்கிறபோது உடன் நடிக்கும் ஹீரோக்களை கலாய்ப்பது பத்தாது என்று சினிமா விழா மேடைகளில் யாராவது ஹீரோக்கள் சிக்கினாலும் அவர்களை வறுத்தெடுத்து விடுகிறார் சந்தானம். அதுவும் வாடா போடா என்று ஒருமையிலேயே பேசி, விட்டால், போதுமடா சாமி என்கிற அளவுக்கு வெறுப்பேத்தி விடுகிறார் மனிதர்.
ஆனால், இப்படி நடிகர்களை கலாய்க்கும் சந்தானத்தை சில நடிகைகள் சந்தடி சாக்கில் கலாய்க்கிறார்களாம். குறிப்பாக, ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்தபோது, படம் முழுக்க உதயநிதி-ஹன்சிகா இருவரையும் சீன் பை சீன் கலாய்த்தபடி நடித்திருந்தார் சந்தானம். ஆனால் அவருக்கு பதிலடி கொடுக்கும வகையில், டேக் முடிந்ததும் சந்தானத்தை பதிலுக்கு செமத்தியாக கலாய்த்து எடுத்து வந்தாராம் ஹன்சிகா. இதனால் ஒருகட்டத்தில் ஹன்சிகாவைக்கண்டாலே தெறித்து ஓடினாராம் சந்தானம்.
அதேபோல் இப்போது, நயன்தாராவுக்கும் சந்தானம்தான் ஜோக்கராம். ராஜாராணி படத்தில் நடித்தபோதே அவருடன் நெருக்கமாகி விட்ட நயன்தாரா, படப்பிடிப்பு கேப்பில் ஆர்யாவுடன் சந்தானம் பேசிக்கொண்டிருக்கும்போது இவரும் கம்பெனி கொடுத்து வந்தாராம். அப்படி ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் விளைவு, ஒருகட்டத்தில், சந்தானத்தின் கலாய்ப்பு பாணி நயனையும் ஒட்டிக்கொண்டதாம்.
அதனால் அவ்வப்போது சந்தானத்துக்கு பதில் கொடுத்து பேசி வந்த நயன்தாரா, பின்னர், நேரம் போகவில்லை என்றால் போன் போட்டு சந்தானத்தை கலாய்க்கிற அளவுக்கு தேறி விட்டாராம். இதனால், ஊரையெல்லாம் நான் கலாய்க்கிற ஆனா, இந்த பொண்ணுங்க போட்டி போட்டு என்னை கலாய்க்குதுங்க என்று ஹன்சிகா-நயன்தாரா மீது புகார் சொல்லிக்கொண்டு திரிகிறார் சந்தானம்.

Comments
Post a Comment