5th of December 2013
சென்னை::வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பது தான் தமிழ் திரையுலகின் தற்போதைய ஹாட் டாக். கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி நடிக்க, வெங்கட்பிரபு இயக்கியுள்ள படம் 'பிரியாணி'. யுவன் இசையமைக்க, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தினைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் U/A சான்றிதழ் அளித்தனர். தற்போது படக்குழு, U சான்றிதழ் வாங்க REVISING COMMITEE-க்கு சென்றிருக்கிறது.
படம் வெளியாகாத நிலையில், வெங்கட்பிரபுவிற்கு எப்படி சூர்யாவின் தேதிகள் கிடைத்தது என்பது குறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல்கள்.
'பிரியாணி' படத்தினை சூர்யாவிற்கு திரையிட்டு காட்டினாராம் வெங்கட்பிரபு. படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா வெங்கட்பிரபுவை வெகுவாகப் பாராட்டினாராம்.
ஆல் இன் ஆல் அழகுராஜாவிற்கு முன் இதைத் தான் வெளியிட்டு இருக்க வேண்டும். ஏன் இப்படி தாமதம் செய்தீர்கள்’ என்று செல்லமாக கடித்துக் கொண்டாராம். அதனைத் தொடர்ந்து, வெங்கட்பிரபுவிடம் தனக்காக ஒரு கதை தயார் செய்யும்படி கேட்டிருக்கிறார் சூர்யா. உடனே ஒரு வரிக்கதையை மட்டும் கூறிவிட்டு, இதுக்கு திரைக்கதை பண்ணனும் சார் என்றாராம்
வெங்கட்பிரபு. நல்லாயிருக்கு.. ஃபுல்லா முடிஞ்சுட்டு சொல்லுங்க. பேசலாம் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாராம் சூர்யா.
சூர்யாவின் இந்த பேச்சால், திக்குமுக்காடிக் போன வெங்கட்பிரபு, சுறுசுறுப்பாக திரைக்கதை அமைக்கும் பணியில் இறங்கிவிட்டாராம்.
டிசம்பர் 20ம் தேதி 'பிரியாணி' வெளியிட அனைத்து பணிகளையும் மேற்கொண்டு இருக்கிறது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம். மேலும், முந்தைய படங்கள் போன்று விளம்பரத்திற்கு நிறைய செலவழிக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறதாம்.
Comments
Post a Comment