கெளதமுக்கு ஜோடியாக நடித்து வரும் லட்சுமிமேனன் அவருடன் மணிக்கணக்கில் கடலை போடுவதாக ஒரு செய்தி!!!

22nd of December 2013
சென்னை::லட்சுமிமேனன் சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகளாகி விட்டது. என்றாலும், இதுவரை எந்த நடிகர்களுடனும் அவர் சகஜமாக பழகியதில்லை. படப்பிடிப்பு தளத்தில் மரியாதை நிமித்தமாக சில வார்த்தைகளை மட்டுமே உதிர்ப்பவர், அத்தோடு நழுவிச்சென்று விடுவார். அதனால்தான், பெரிய அளவில் கிசுகிசு வலையில் சிக்காமல் தப்பித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், சிப்பாய் படத்தில் கடல் கெளதமுக்கு ஜோடியாக நடித்து வரும் லட்சுமிமேனன் அவருடன் மணிக்கணக்கில் க
 
டலை போடுவதாக ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது. அப்படியென்றால் இவர்களுக்கிடையேயும் ஏதாவது காதல் கீதல் என்று சத்தமில்லாமல் பற்றிக்கொண்டுள்ளதோ? என்று கெளதமிடம் கேட்டால், அவசர அவசரமாக அப்படியேதும் இல்லை என்று மறுக்கிறார்.

மேலும், என்னுடன் ஜோடி சேர்ந்த முதல் பட நடிகை துளசி, சிப்பாயில் நடிக்கும் லட்சுமிமேனன் இருவருமே ஒரே வயதுடையவர்கள். நானும் அவர்கள் செட் என்பதால், ஸ்பாட்டில் நடிகர்-நடிகை என்பதை மறந்து விட்டு சக நண்பர்களைப்போலவே பழகினோம். அதில் லட்சுமிமேனன் ரொம்ப இயல்பாக பழகக்கூடியவர். அவரிடம் பேசினால் போரடிக்கவே செய்யாது. அந்த அளவுக்கு ஜாலியாக பேசுவார்.

ஆனால், நாங்கள் சினிமாவைப்பற்றி பேசுவதை விட, பள்ளிக்கூடத்தில் நடந்த சுவராஸ்யமான விசயங்களைப்பற்றித்தான் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வோம். ஆனால், இதை சில கண்கள் தவறான கண்ணோட்டத்திலும் பார்ப்பதுண்டு. மடியில் கனமில்லாதபோது நாங்கள் எதற்காக பயப்பட வேண்டும். அதனால் எங்களது ப்ரண்ட்ஷிப் தொடர்கிறது என்கிறார் லட்சுமிமேனன்.

tamil matrimony_HOME_468x60.gif

Comments