விதார்த் ஓவியராக நடிக்கும் வெண்மேகம்!!!

9th of December 2013
சென்னை::விதார்த் ஓவியராக நடித்து வரும் படம் வெண்மேகம். அவருக்கு நண்பராக நடிக்கிறார் நண்டு ஜெகன் அவரும் ஓவியர்தான். கேரள மாடல் இஷாரா ஹீரோயின். ஜெயஸ்ரீ சிவதாஸ் என்ற குழந்தை நட்சத்திரம் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ராம், லக்ஷமன் என்ற டுவின்ஸ் சகோதரர்கள் டைரக்ட் செய்துள்ளனர். அவர்களின் டுவின்ஸ் மனைவிகள் சுனிதா சுஜாதா தயாரிப்பாளர்கள்.

"விதார்த்தும், ஜெகனும் ஓவிய நண்பர்கள். பக்கத்து வீட்டில் வசிக்கும் ரோகிணியின் மகள் ஜெயஸ்ரீ இருவரிடமும் சகஜமாக பழகுவாள். இதனை தவறாக புரிந்து கொள்ளும் ரோகினி மகளை கண்டிப்பார். அதன்பிறகு ஜெயஸ்ரீக்கு ஒரு பிரச்னை வருகிறது. அதில் விதார்த்தும், ஜெகனும் மாட்டிக் கொள்கிறார்கள் அதிலிருந்து அவர்கள் எப்படி எஸ்கேப் ஆகிறார்கள் என்பதுதான் படத்தின் ஸ்டோரி" என்கிறார்கள். டைரக்டர்கள் ராம்-லக்ஷ்மன்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments